சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் கைது!
Saturday, December 24th, 2016
சிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகள் மற்றும் 2 தடை செய்யப்பட்ட வலைகள் என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!
இலங்கையில் சுவிஸ் நட்சத்திர ஹோட்டல் திறப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை - பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்ப...
|
|
|


