சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் மன்னாரில் கைது!

விடத்தல் தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 இலங்கை மீனவர்களை கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கண்ணாடியிழை படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் தங்கூசி வலை ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைதுசெய்யப்பட்ட மீனவர் இருவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா!
யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!
மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாற...
|
|