சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கு அபராதம்!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்குத் தலா- 10 ஆயிரம் ரூபா அபராதம் மல்லாகம் நீதவான் ஏ.யூட்சனால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த -03 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், அச்சுவேலிப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோத மின்சாரப் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நீதவான் மேற்கண்டவாறு அபராதத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டார். அத்துடன் மின்சார சபை கோரும் நஸ்ட ஈட்டுத் தொகையை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டா
Related posts:
PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் - நல...
|
|