சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் தகவல்!
Saturday, September 19th, 2020
சட்டவிரோத ஆள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்பின் இலங்கை பிரதிநிதி சரத் டாஸ் நீதி அமைச்சர் அலிசப்ரியை நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
இதன்போது இலங்கையில் புலம்பெயர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதுதொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக இடம்பெறும் ஆள் கடத்தல்களை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் அதற்காக தற்போது இருக்கும் சட்ட முறைமைகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கருத்து பரிமாறப்பட்டதுடன், ஆள் கடத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் மோசமான விளைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டும் ஆள் கடத்தல் வியாபாரத்தை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தன்னால் முடியுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது என இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


