சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா பத்தாயிரம் அபராதம் !
Friday, June 17th, 2016
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தலா பத்தாயிரம் ரூபா அபராதமாகவும் விதித்து மல்லாகம் மாவடட நீதவான் எம். ஏ. யூட்சன் நேற்று முன்தினம் புதன்கிழமை(15-06-2016) தீர்ப்பளித்தார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரும் நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Related posts:
ஆவா குழு அரசியல் கட்சியினதோ, இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டில் இல்லை – அமைச்சர் ருவன் விஜேவர்தன
முகாமையாளர் மீது வாள் வெட்டு: தொலைபேசி மற்றும் பணம் பறிப்பு !
அராலியில் டெங்குத் தொற்று : 10 பேர் சிகிச்சையில் சேர்ப்பு !
|
|
|


