சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட  மீனவர்கள் கைது!

Saturday, August 27th, 2016

மன்னார் – தல்பாது கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 மீனவர்கள் நேற்று (26) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்களிடமிருந்து 2 படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று மட்டகளப்பு கதிரவெளி கடற் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 2 படகுகள், தடைசெய்யப்பட்ட வலை மற்றும் நீச்சல் மகமூடி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் வாகரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Related posts: