சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் – சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

சகோரனுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டுக்கு செல்லாது தனித்து நின்ற சிறுவன் நேற்று வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புதத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தொட்டியடியைச் சேர்ந்த சண்முகலிங்கம் சதீஸ்குமார் (வயது-12) என்ற சிறுவனே சிநுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
வவுனியா பொதுவைத்தியசாலைக்கு முன்னின்ற அந்தச் சிறுவன் சகோரனுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டுக்குச் செல்லாமல் வவுனியவிலிருக்கும் உறவினர் வீட்டுக்கு வந்தேன் என்றும் உறவினரின் வீட்டுக்குச் செல்ல வழி தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்திற்பு சிறுவனின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸார் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஜாரிடம் தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர். சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என்று சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|