கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கைது
Wednesday, May 11th, 2016
கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கோப்பாய்ப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நேற்று முன்தினம் 09 ஆம் திகதி வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் , உரும்பிராய் , நீர்வேலி போன்ற பகுதிகளில் தேவையற்ற வகையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைக் கைது செய்து விசாரணை நடாத்தினர்.
பொலிஸாரின் விசாரணையின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியமை , முன்னுக்குப் பின்னான வகையில் பதிலளித்தமை போன்ற காரணங்களாலேயே குறிப்பிட்ட சந்தேகநபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கதக் நடனம் புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்
34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
|
|
|


