கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை : புதிய சட்டத்தை கொண்டு வர அரசு முயற்சி!

Friday, March 10th, 2017

கொழும்பு நகரில் நாளாந்தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ள் இடம்பெறுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்தச் சட்டத்தை தயாரிக்கும் வரை பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் விதத்தில், கொழும்பில் நடைபெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கிழமைக்கு ஒன்றாகக் குறைப்பதற்கு தேவையான முறைமை ஒன்றையும் கடைப்பிடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன..

Related posts: