கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு கொழும்பில்!
Tuesday, July 25th, 2017
ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 17வது கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
கொழும்பில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரீவன் ஹெவொரன்சியினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும்; சர்வதேச பிராந்திய உறுப்பினர்கள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி பெர்னாண்டோ, கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாட்டின் தலைவர் செய்ஜி டகாஜி, ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
மீண்டும் அச்சுறுத்தலை நோக்கி நகரும் இலங்கை – எச்சரிக்கை செய்துள்ளார் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அச...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குழு நியமனம்!
|
|
|


