கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் 88 வயதான தாய், 51 வயதான மனைவி மற்றும் 23 வயதான மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஜாஎல பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் இத்தாலியில் இருந்து வந்துள்ளார்.
ஜாஎல கபாலகந்த பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான இந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் இத்தாலியில் இருந்து வந்தவர்களுடன் பழகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தினமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அனுர அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|