கொரியாவின் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில்

கொரியாவின் தயாரிக்கப்படும் கியா மற்றும் ஹையுண்டாய் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜேர்மனியின் வேக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் தனது தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவ உள்ளது.
புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக உலகில் பிரபலமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு முதலீடுகளுக்காக வரவுள்ளனர்.
இதன் மூலம் நாடு வேகமாக அபிவிருத்தியடையும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்
Related posts:
புதையல் தேடிய நால்வர் கைது !
இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு...
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் - நாடுமுழுதும் அவசர கால சட்டம் பி...
|
|