கொட்டகை அமைத்து பொங்கியதால் கிளம்பிது சர்ச்சை : காங்கேசன்துறை ரயில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸிடம் முறைப்பாடு!

வேப்பமரத்துக்கு கீழ் இருந்த இந்துக் கடவுளுக்கு தற்காலிக கொட்டகையை அமைத்து பொங்கி வழிபட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மீது காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் காங்கேசன்துறை புகையிரத நிலைய பொறுப்பதிகாரியால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் 769 வழித்தட தனியார் பேருந்துகளுக்காக தற்காலிக தரிப்பிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இந்துக் கடவுளின் சிலை உள்ளது. சாரதிகளும், நடத்துநர்களும் இந்துக் கடவுளை தினமும் வழிடுவது வழக்கம்.
தைப்பொங்கலை முன்னிட்டு கடவுள் சிலைக்கு சிறிய தகரக் கொட்டகையை அவர்கள் அமைத்தனர் அதை அவதானித்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறையிட்டார். புகையிரத நிலையக் காணிக்குள் அனுமதியின்றி கட்டடம் அமைக்கப்படுகின்றது என்று அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்காலிக கொட்டகையை அகற்றுமாறு அறிவுறுத்தினர். தனியார் பேருந்துகளின் சாரதிகள், நடத்துநர்களும் கொட்டகையை அகற்றினர். சம்பவம் தொடர்பில் விளக்கம் கேற்பதற்காக நேற்று சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி சிலை அமைக்கப்பட்டு தகரக் கொட்டகை போடப்பட்ட இடம் புகையிரத நிலையக் காணக்கு உட்பட்ட பகுதியாகும். எமது நிலையத்திற்குட்பட்ட பகுதியை நாம் அளந்து பாதுகாப்பு வேலி போடவுள்ளோம். எமது காணியை அளக்கும் போது நிழைல வைக்கப்பட்டுளள் பகுதி உள்வாங்கப்படாவிடின் நாங்கள் இதில் தலையிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
Related posts:
|
|