கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது

மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழு நேற்று முன்தினமிரவு(01) யாழ். கொக்குவில் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல் நடாத்திச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே இந்தச் சம்பவத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்படடவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது - மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் இரண்டு சம்பளங்களை பெறமுடியாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா...
|
|