கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞருக்குப் பிணை!

குப்பிளான் தைலங்கடவைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞரொருவரை நேற்றுத் திங்கட்கிழமை(20) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி பகுதியிலிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த மாதம் கைத் தொலைபேசியொன்று திருடப்பட்டுள்ளமை தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தொலைபேசியைத் திருடியவர் கண்டறியப்பட்டார்.
குறித்த நபரை மல்லாகம் நீதவான் ஆர். வசந்தசேனனின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related posts:
விண்ணப்பம் கோரல்!
கடந்த 2 ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ளது – எச்சரிக்கை விடுத்துள்ளது அரச ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதிலுள்ள தடைகள் என்ன ? - விளக்கம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்க...
|
|