கைத்தொழில் பேட்டை – பிரதேச மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Thursday, January 5th, 2017
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டையை அமைப்பதன் மூலம் பிரதேச மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தேவையற்ற விடயங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான தரிசு காணியிலேயே சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.
மொனராகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிர்மாணப் பணிகள் குறித்து முழுமையான ஆய்வுகள் இடம்பெற்றது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் இதுதொடர்பில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
வேலணை மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண் - முழுமையான விசாரணை அறிக்...
அத்தியாவசிய சேவைகளை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
இந்திய படகுகளை அரசுடைமையாக்க - ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் கஜநிதிபாலன் உத்தரவு!
|
|
|


