கைத்துப்பாக்கிகள் மாயம்! விசாரணைகள் தீவிரம்!!

Friday, December 9th, 2016

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் மூன்று கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவிற்கு அமைய இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கைத்துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைத் தொடர்ந்து, காணாமல் போன இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இதில் ஒர் கைத்துப்பாக்கியை ஒன்றரை லட்ச ரூபாவிற்கு பாதாள உலகக்குழுத் தலைவர் ஒருவருக்கு விற்பனை செய்ததாக சந்தேக நபர் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார். அண்மையில் குருனாகல் பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு குறித்த கைத்துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கைத் துப்பாக்கிகள் காணாமல் போன சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய எச்.ஏ.ஜே சமரசிங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: