கூட்டுறவுத்துறை பிரச்சனைகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு!
Monday, February 26th, 2018
கூட்டுறவுத்துறை மூலமும், பிரச்சனைகளை எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியூத்தீன் உறுதியளித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் முன்னணி அமைப்புகளுடன் தமது அமைச்சில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கூட்டுறவுத்துறையுடன் சம்பந்தப்பட்ட 14 அமைப்புக்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.
கூட்டுறவுத்துறையின் உற்பத்திகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும் அதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறைக்கென தகவல் தொடர்பாடல் வலயமைப்பொன்றையும், ஆராய்ச்சி மத்திய நிலையம் ஒன்றையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
"சோ" மருத்துவமனையில்!
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!
நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை வந்தடையும்...
|
|
|


