குளியலறையிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவ பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவியின் சடலம், நேற்றைய தினம் பிலியந்தல மதபத்த பகுதியில் அமைந்துள்ள அவரின், வீட்டில் உள்ள குளியலறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் கணவரே சடலத்தை நேற்றைய தினம் மீட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
உலகின் பெறுமதி மிக்க கோப்பி இனம் நுவரேலியாவில்!
உயிரிழந்த யாழ் – பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் - குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்...
|
|