குதிரை ஓடியவர் முல்லைத்தீவில் கைது!

Thursday, December 15th, 2016

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர்  ஒருவர் முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது செய்துள்ள முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இவர்களை இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

arrest_1_0_mini-720x480

Related posts: