குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவை பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டமையால் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பத்தமுல்லை இசுருபாயவிலுள்ள புதிய கட்டடத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளவுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் டி சொய்சா தெரிவித்தார்.எவ்வாறாயினும், கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கண்டி மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய அலுவலகங்களின் சேவைகளும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன.
Related posts:
பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல் - இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...
கடந்த 3 மாதங்களில் 20,365 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - 8 பேர் உயிரிழப்பு - . சுகாதார அமைச்சு தகவல்!
|
|