குடாநாட்டில் மீன்பிடி உற்பத்தி அதிகரிப்பு!

யாழ்.மாவட்டம் மீன்பிடி உற்பத்தியில் மீண்டும் முன்னெற்றப்போக்கில் செல்லத் தொடங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடி உற்பத்தி 2016ஆம் ஆண்டு 29 மெற்றிக்தொன்னில் அதிகரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தின் மொத்த மீன்பிடி உற்பத்தி 1983 ஆம் ஆண்டு 48,677 மெற்றிக்தொன்னாகக் காணப்பட்டது. இதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி உற்பத்தி குறைவடைந்து வந்தது.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீன்பிடி உற்பத்தி அதிகரித்து வந்தது. 2014ஆம் ஆண்டு 31,767 மெற்றிக்தொன் மீன் உற்பத்தி காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு 31,447.5 மெற்றிக்தொன்னாகக் குறைவடைந்திருந்தது. அந்த நிலையில் 2016ஆம் ஆண்டு மீண்டும் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. 29 மெற்றிக்தொன்னால் அதிகரித்து 31,476 மெற்றிக் தொன்னாகப் பதிவாகியுள்ளது.
Related posts:
எந்தத் தொழிலாக இருந்தாலும் எதிர்காலத்தில் சான்றிதழ் தேவை – கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ்.மா...
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்க்கமான தினங்கள் கடந்து செல்கின்றன - விமல் வீரவங்ச!
மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு டில்சான் ஆதரவு!
|
|