குடாநாட்டில் டெங்கு தீவிரம்!

Friday, August 25th, 2017

இவ்வாண்டில் இது வரையான காலப்பதியில் டெங்கு நோய்க்குள்ளாகி சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்ரில் தெரிவித்துள்ள யாழ் போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ப.சத்தியமூர்த்தி இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கே;டடுக் கொண்டார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவது.

டெங்கு நோயின் தாக்கமானது நாடு தழுவிய ரீதியில் அதிகரித்துள்ளது.அந்த வகையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.மேலும் இந் நோயின் தாக்கத்தை அவதானிக்கின்ற போது யாழ்.போதனாவைத்தியசாலையின் கடந்த ஆண்டில் மொத்தமாக டெங்கு நோயால்அனுமதிக்கப்பட்டவர்களது அளவினை விட இவ் ஆண்டில் இதுவரையான காலத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை இரண்டு மடங்கிற்க்கும்அதிகமாகஉள்ளது. குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயிரத்து 339 பேர் டெங்கு நோய்தாக்திற்க்கு உள்ளாகி இருந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தும்இருந்தார். அதே போன்று 2015 ஆம் ஆண்டு ஆயிரத்து 309 பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தார்கள்.

2016 ஆண்டு 670பேர் டெங்கு நோய் தாக்கதிற்குள்ளாகியதுடன் அவர்களில் இருவர் உயிர் இழந்திருந்தனர்.இதே வேளை இவ் ஆண்டில் கடந்த 21ஆம் திகதி வரை டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகி ஆயிரத்து 702பேர் சிகிசிசைளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் இருவர் உயிர்இழந்ததாகவும் யாழ் .போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: