குடாநாட்டில் அதிகரித்துள்ள இளநீர் வியாபாரம்!

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள்,திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம், உரும்பிராய் உட்பட யாழ். குடாநாட்டின்பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகிறது.
முன்னர் 50 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீரொன்று தற்போது60 ரூபா முதல் 70 ரூபா வரை விற்பனையாகிறது. குருநாகல், கண்டி, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து எடுத்து வரப்பட்டஇளநீர்களேயே தாம் விற்பனை செய்வதாகவும் தற்போது வெளிநாடுகளுக்குஅதிக இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் விற்பனைக்குத் தேவையானபோதியளவு இளநீர்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் தற்போது ஒரு நாளைக்குச்சராசரியாக அறுநூறு வரையான இளநீர்கள் விற்பனையாகிறது. உள்நாட்டவர்கள்மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் இளநீர்களை ஆவலுடன் பெற்றுப் பருகுகின்றனர்.
Related posts:
|
|