கீரிமலை கேணியில் முழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Tuesday, November 15th, 2016

யாழ்ப்பாணம், கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு சுபாஸ்கரன் வயது(38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உறவினர் ஒருவரின் அந்தியெட்டி கிரியைகள் செய்வற்காக சென்ற மேற்படி நபர், கேணியில் நீராடச்சென்றிருந்தார்.

குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்தவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவர்; ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.

erewrewr68

Related posts:

ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் - பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொ...
சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு - கிளிநொச்சி...
கண்டிக்கு முதலிடம் – இரண்டாம் இடம் யாழ்ப்பாணம் - 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி - ...