கீரிமலையில் குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயத்திற்குச் செந்தமிழில் குடமுழுக்கு!

Saturday, November 5th, 2016

வரலாற்றுப் பெருமை மிகு கீரிமலை மண்ணில் ஈழத்துச் சித்தர் பரம்பரை முன்னோடிகளில் ஒருவரான குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு செந்தமிழ் ஓத திருக்குடமுழுக்குச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை(03) காலை-07.35 மணிக்கும் 09.05 மணிக்கும் இடைப்பட்ட சுபமுகூர்த்த வேளையில் செந்தமிழ் குருமார்களால் திருக்குடமுழுக்குச் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்துச் சித்தர்களின் முக்கியமானவராகத் திகழ்ந்த கடையிற் சுவாமிகளின் நேரடிச் சீடரான குழந்தை வேல் சுவாமிகள் 1909 ஆம் ஆண்டு கீரிமலை மண்ணிலே சமாதியடைந்தார். அவர் சமாதி அடைந்த கீரிமலை தீர்த்தக் கரையிலேயே அவருக்குச் சமாதி அமைக்கப்பெற்றுச் சிவாலயமும் அமைக்கப் பெற்றது. குழந்தை வேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் நாட்டில் கடந்த கால யுத்த சூழ்நிலைகளால் முழுமையாகச் சேதமடைந்தது.

குழந்தைவேல் சுவாமிகளின் பூட்டனாரின் நிதிப்பங்களிப்பில் சைவமகா சபையின்  சிவதொண்டர்களின் பேராதரவுடன் மீள் புனருத்தாரண சபையால் பல இலட்சம் ரூபா நிதியில் இவ்வாலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. செந்தமிழில் இடம்பெற்ற திருக்குடமுழுக்கு நிகழ்வைக் காணப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்

unnamed

Related posts: