கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நால்வரையும் விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

Friday, May 26th, 2017

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுவிக்குமாறு தெரிவித்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று வியாழக்கிழமை(25)  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம்  நடாத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல்-12.30 மணி முதல் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் ‘மனிதாபிமானத்துடன் வேலையற்ற பட்டதாரிகளை விடுதலை செய்க!’ , ‘எங்கள் பிள்ளைகள் பட்டம் பெற்றது சிறைவாசம் அனுபவிக்கவா?’  உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts:

தாக்குதலுக்கு மன்னர் 97 முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கை - பொறுப்பானவர்கள் அவற்றின் தீவிரத்தைக் கவனிக்...
புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு - ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில்...
வடக்கு மாகாணத்தில் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டம் - ஆளுநர் தலைமையில் ஆராய்வு!