கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் குமாரவேல்

Tuesday, November 28th, 2017

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளராக வைத்திய கலாநிதி குமாரவேல் மாகாண சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும் வண்ணம் இந்த நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராகவுள்ள வைத்திய கலாநிதி குமரவேல் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நிரந்தரப் பணிப்பாளர் நியமிக்கப்படும் வரையில் அங்கு பதில் பணிப்பாளராகவும் வைத்திய கலாநிதி குமரவேல் பணியாற்றுவார் எனவும் மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: