கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களினுடாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சினுடைய தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்!
சோளப் பயிற்செய்கையை அதிகரிக்க நடவடிக்கை!
அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - எதிர்வரும் 29 ஆ...
|
|