கிரிக்கெட் விளையாடப்படுவது நிறுத்தப்படும் வரை இலங்கை – இந்தியா இடையில் நெருக்கடிகள் இல்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Friday, January 20th, 2017

கிரிக்கெட் விளையாட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் ஓர் மதமாக பார்க்கப்படும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் விளையாடப்படும் வரையில் எந்தவொரு நெருக்கடிகளோ முரண்பாடுகளோ இருக்க முடியாதென  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள போதே இவ்வாறு தெரிவித்திருக்கும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிராந்தியத்திற்கும் தெற்காசியாவிற்கும் வெளியில் இருக்கும் வர்த்தக பங்காளர்களுடன் பரஸ்பர வர்த்தக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு இலங்கை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியிருந்த ரணில் விக்ரமசிங்க பிராந்திய உள் உறவுகளின் அடிப்படையில் இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ரீதியாக உறவுகள் தொடர்ந்தும் முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கும் ஆனால் இந்த நாடுகளுக்கிடையில் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தும் போதுதான் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவின் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த கருத்து தெரிவிக்கும்போதே  ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

blogger-image-1075572354

Related posts: