கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்டத்தில்- அரச அதிபர் வேதநாயகன்

Friday, April 22nd, 2016

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெளரவப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணை அடங்கிய பொருளாதாரக் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இத் திட்டத்திற்கென இவ்வருடம் அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் ஒரு மில்லியன் ரூபா வீதம் தேசிய வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவ் வேலைத் திட்டத்தை யாழ். மாவட்டத்திலும் ஆரம்பிக்க மாவட்ட செயலகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஒவ்வொரு பிரதேச செயலர் ஊடாக கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட்டு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதேச செயலாளர்கள் மேற்படி அமைச்சினால்  கோரப்பட்டுள்ளனர்.

இத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஐப்பசி மாதம்- 31 ஆம் திகதிக்குள் பணிகள் பூர்த்தி செய்யப்படுவது அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார  விவகாரங்கள் அமைச்சின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: