கிணற்றில் தவறி வீழ்ந்து யுவதி உயிரிழப்பு!
Tuesday, June 28th, 2016
வேலணை, 5ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியினை எடுக்க முற்பட்ட யுவதி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து நேற்று (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற யுவதியே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார்.
Related posts:
மிஹின் லங்கா நிறுவனத்தின் 50 வீதமான ஊழியர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துடன் இணைப்பு!
திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதில் பொலிஸ்மா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|
|


