கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவிப்பு!
Thursday, December 1st, 2016
அல்லைப்பிட்டி கமக்காரர்கள் அமைப்பினால் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பிரதேசத்தில் நெற்செய்கை மற்றும் பெரும்போகச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நன்மைகருதி பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அறுவடைக் காலம் முடியம் வரை கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் பிரதெசத்தில் கால்நடைகளை வளர்ப்போர் பெரும்போக அறுவடை முடியும்வரை கட்டி வளர்க்கவேண்டும் எனவும் மாறாக கால்நடைகள் பயிரழிவை ஏற்படுத்தும் பட்சத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பிடிகாரர் மூலம் பிடிக்கப்பட்டு பிடிகூலி மற்றும் பயிர் அழிவு நட்டம் என்பன அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!
நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி வழங்காதிருக்க யோசனை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி...
உரச் சட்டத்தில் திருத்தம் செய்ய விவசாய அமைச்சர் நடவடிக்கை - அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


