காலாவதியான மருந்துகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த தவறிய மருந்தகம் ஒன்றிற்கு 9ஆயிரம் ரூபா அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் குறித்த மருந்து விற்பனை நிலையத்தினை சீல் வைத்து மூடுவதற்கு கட்டளை பிறப்பித்தார்.
மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகள் கடந்த வாரம் யாழ்.நகரப்பகுதியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது குறித்த மருந்தக உரிமையாளருக்கு 9.000ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் நேற்றையதினம் அதன் அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க நீதிவான் யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் இணைப்பதிகாரிக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். நேற்று வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையினை தாக்கல் செய்தபோது, விசாரணை செய்த நீதவான் குறித்த மருந்தகத்தை சீல் வைத்து மூடுவதற்கு கட்டளை பிறப்பித்தார்.
Related posts:
|
|