காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்களுக்குத் தண்டம் !
Thursday, March 2nd, 2017
மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை விற்பனை செய்த எட்டு வர்த்தகர்கள் கண்டறியப்பட்டனர்.
இவ்வாறான குற்றச் சாட்டின் பேரில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எட்டு வர்த்தகர்களுக்கும் 11 ஆயிரத்து 500 ரூபா நீதவானால் தண்டம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts:
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் -...
24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானம்
|
|
|


