காலநிலை மாற்றத்தினால் வவுனியாவில் உழுந்து செய்கை பாதிப்பு!

கடும் வறட்சி மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த உழுந்து செய்கை பாதிப்படைந்துள்ளது.வவுனியாவில் கடந்த காலங்களை விட இம்முறை அதிகமாக 18,000 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்தும் நிலவி வந்த வறட்சி காரணமாக உழுந்து செய்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளதுடன், பனியின் தாக்கத்தால் தப்பியிருந்த உழுந்துச் செடிகளும் தற்போது அறுவடைக் காலத்தில் பெய்த மழை காரணமாக பாதிப்படைந்துள்ளது.இதனால் உழுந்து செய்கையாளர்கள் பயிர்ச்செய்கை செலவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மிகுதி உள்ள உழுந்துச் செடிகளில் காய் தாக்கம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவின் பின்தங்கிய மற்றும் மீள்குடியேற்ற கிராமங்களில் கடன்களைப் பெற்றும், அடைவு வைத்தும் உழுந்துச் செய்கையில் ஈடுபட்ட பலர் தற்போது அவை பாதிப்படைந்துள்ளமையால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் உழுந்து செய்கை பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் நஸ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உழுந்துச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொ...
சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
|
|