காணாமல் போனோர் அலுவலகம் அமைக்க அமெரிக்கா உதவி!

இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையாக, இந்த அலுவலகத்தை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்படி விரைவில் இந்த அலுவலகம் அமைக்கப்படும். இதன் ஊடாக காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும், குடும்பங்களை மீளிணைக்கவும் அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
குடும்பத் தகராறு – அரியாலையில் கணவனை அடித்துக் கொன்றார் மனைவி !
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் ச...
|
|