காடுகளில் மணல் அகழ்வதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்!
 Friday, March 17th, 2017
        
                    Friday, March 17th, 2017
            
சுற்றுச் சூழல் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொண்டு வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளில் மண், மணல், சரளைக்கல் மற்றும் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தனிப்பட்ட முறையில் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்று கொண்ட பின்னர் குறித்த அகழ்வுகள் இடம்பெறுவதாக வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஜெனரல் அனுர ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இனிமேல் அந்த அனைத்து தேவைகளும் அரசாங்க நிறுவனம் ஊடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சரியான முறைகள் இன்றி மண், மணல், சரளைக்கல் மற்றும் கருங்கல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே மேற்குறித்த இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குப்பைகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் கைது! 
எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை - ஜனாதிபதி கோட்டபய !
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது - அமைச்சர் நஸீர் ...
|  | 
 | 
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி வளாக வீதி நெல்சிப் திட்டத்தின் கீழ் கொங்கிறீர்ட்...
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள்  - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெ...
புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
 
            
        


 
         
         
         
        