காக்கைத்தீவு மீன் சந்தையில் கட்டுமானம் தாமதம் – அடுத்தாண்டும் குத்தகைக்கு வழங்க முடியாத நிலை என சுட்டிக்காட்டு!

Friday, November 25th, 2016

காக்கைதீவு சந்தைக்குரிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படாததால் அடுத்த ஆண்டுக்கான குத்தகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இதனால் பிரதேச சபையின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலி.தென்மெற்கு பிரதேசத்தில் காக்கைத்தீவு இறங்கு துறையில் கூறுவிலை மண்டபத்துக்கு அருகில் பிரதேசசபையின் அனுமதியின்றிச் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் பல வருடங்காளாக மீன்சந்தை இயங்கியது.

இந்தச் சந்தையை இந்த வருடம் குத்தகைக்கு எடுப்பதில் இரு பொது அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சந்தை குத்தகைக்கு வழங்கப்படாமல் தொடர்ந்து இயங்கியது. இதனால் சுமார் 8 லட்சம் ரூபாவரை பிரதேச சபைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கையைத் தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் படி சுகாதார விதிமுறைகளுக்கு அமையப் பிரதேச சபையால் புதிய மீன்சந்தைக் கட்டிடம் அமைப்பதங்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படாததால் 2017ஆம் ஆண்டு குத்தகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சைக்கிள் பாதுகாப்பு நிலையம் மட்டும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

unnamed-395

Related posts: