கல்கிஸை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது!

கல்கிஸையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
19 மற்றும் 20 வயதான இந்த இரண்டு இளைஞர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கல்கிஸையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்களான இந்த இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த இருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!
தேய்ந்த வாகன டயர்களை மாற்றுவதற்கு சலுகைக் காலம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...
|
|