கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலவசப் பயிற்சி நெறி யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி நிலையங்களில் நிகழவுள்ளது. ஜி.சி.ஈ. சாதாரண தரத்தில் கணிதம் – சி, ஆங்கிலம் – சி உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி, அல்லது கணிதம் – எஸ், ஆங்கிலம் – எஸ் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் உயர்தரப் பரீட்சையில் 2 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் 25 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
முழு விவரத்தை சுயமாகத் தயாரித்து மாவட்ட அலுவலகர், நைரா இல 44, சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் காகித உறையின் இடதுபக்க மேல் மூலையில் தகவல் தொடர்பாடல் கற்கைநெறிக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அலுவலர் கி.கிருஸ்ணபாலன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|