கர்ப்பிணி பெண் படுகொலை..! சந்தேகநபர்கள் அணிவகுப்பு!
Wednesday, February 8th, 2017
ஊர்காவற்துறை பகுதியில் வைத்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக மூளை சிதைவடைந்து அவர் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்டைய சந்தேகநபர்கள் என தெரிவித்து மண்டைதீவுப் பகுதியில் வைத்து இருவரை பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் முக்கிய சாட்சியாக இருக்கின்ற நிலையில், நாளைய தினம் அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, குறித்த படுகொலை சம்பவத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என கடந்த 3ஆம் திகதி நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தேகநபர்கள் சார்பில் ஊர்காவற்துறை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் சட்டத்தரணி இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


