கருங்குளவிக் கூடுகள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, July 28th, 2020

கருங்குளவிக் கூடுகள் மரங்களில் இருப்பதைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார திணைக்களத்துடன் அல்லது கிராம அலுவலர் பிரிவு, பொதுச் சுகாதார பரிசோதகர், போன்றோருடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் கூடுகளை அழித்து, குளவிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என சாவகச்சேரி சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மீசாலை வடக்கில் பனை மரத்தில் இருந்து விழுந்த ஓலைக்குள் இருந்த கருங்குளவியின் தாக்குதலில் சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் ஒன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதே போன்று மத்திய மலை நாட்டிலும் குளவித்தாக்குதலுக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதுடன். உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: