கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்தார்.
நேற்று மாலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனச்சாரதி தப்பித்துச் சென்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
காலநிலையில் மாற்றம்!
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!
|
|