கட்டாக்காலி கால்நடைகளை பிடிக்கும் பணியில் யாழ்ப்பாண மாநகர சபை!

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
நல்லூர் பகுதியில் நேற்றுக்காலை 2மாடுகள் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டி விடப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட மாடுகளை உரியவர்கள் அடையாளம் காட்டி 7 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியம் என மாநகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
உரிமை கோரப்படாதுவிடின் அந்த மாடுகள் மாநகராட்சி மன்றத்தால் ஏலத்தில் விற்கப்படும். யாழ்ப்பாண மாநகராட்சி மன்றப் பகுதியில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக் கால்நடைகளால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் அவற்றை உடனடியாகப் பிடிக்கும் பணியை மாநகராட்சி மன்றம் ஆரம்பித்துள்ளது என ஆணையாளர் வாகீசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|