கடையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Saturday, March 3rd, 2018
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அறுபத்தொன்பது வயதான சிலுவைராசா என்பவரே ஆவார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியிலுள்ள இரும்புக்கடை ஒன்றின் உரிமையாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது இரும்புக் கடையின் பின்புறமாகவே அவர் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு இலங்கைக்கு நிதி உதவி!
தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|
|


