கடல் தொழிலுக்கு சென்ற இரு இளைஞர்கள் வீடு திரும்பாததால் பதற்றம்!!

Saturday, April 30th, 2016

திருகோணமலை திருக்கம் மற்றும் பள்ளக்கை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த 27 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பகுதியில் கடல் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் இன்றுவரை வீடு திரும்பவில்லை என குறித்த இளைஞர்களது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

மோகனதாஸ் சயந்தன் வயது 24 மற்றும் உலகநாதன் குமரேஸ் வயது 24 ஆகிய இளைஞர்களே காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு இளைஞர்களது இல்லங்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின்பேரில்  திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதியான தங்கராசா புஸ்பராசா நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடி ஆறுதல் தெரிவித்ததுடன் இளைஞர்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினர் மற்றும் பொது அமைப்பினர் ஆகியோரிடம் பேசி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கொடுத்துள்ளார்.

இதனிடையே குறித்த இளைஞர்கள் தொழிலுக்கு சென்ற படகு நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

image-20f4d9e9c7a232e18ea21fe38bc615240bc21fe1695e5a04f9634ac4e77da53f-V

Related posts:

30 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை - கிளிநொச்சி  பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்கம்!
அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன - அமைச்சர் கலாநிதி...