கடற்றொழில் உபகரணங்களுக்கு இழப்பீடுகளை வழங்க கோரிக்கை!

Tuesday, July 26th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மீனவரின் கடற்றொழில் உபகரணங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படவில்லையென கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல இலட்சம் பெறுமதியான படகுகள் உட்பட கடற்றொழில் உபகரணங்கள் காற்றுடன் கூடிய மழை காரணமாக சேதமடைந்தன. மீன்பிடிப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் கடல் அலைகளினால் இழுக்கப்பட்டு மூழ்கிய நிலையிலும் சேதமடைந்த நிலையிலும் கிளாலி, பூநகரிக் கடற்பகுதிகளிலிருந்து கடும் போராட்டத்துக்கு மத்தியில் கடற்றொழிலாளர்களினால் மீட்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் இழப்பீடுகளை மதிப்பீடு செய்த நிலையிலும் அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படாததன் காரணமாக பல குடும்பங்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். இந்நிலையில் இழப்பீட்டை விரைந்து வழங்குமாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts: