கடற்படைக்குப் புதிய ஊடகப் பேச்சாளர்!
Sunday, October 29th, 2017
கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக கொமாண்டர் தினேஷ் பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடற்படையின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க தற்போது வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.1996ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட திணேஷ் பண்டார, 1998ம் ஆண்டு முதல் ஆணையிடல் அதிகாரம் கொண்டவராக செயற்பட்டு வருகின்றார்.அத்துடன் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் அவர் கடற்படைப் பாதுகாப்பு தொடர்பான மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Related posts:
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் - சுகாதாரப் பிரி...
இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு - லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை இயக்குநர் தெர...
கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் - கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!
|
|
|


