கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!
 Wednesday, September 20th, 2017
        
                    Wednesday, September 20th, 2017
            
யாழ். மாநகர சபைக்குப் பின்புறமாகவுள்ள பன்றிக் கோட்டுப் பிள்ளையார் ஆலய வளாகத்திலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். நாவலர் வீதி அரியாலைப் பகுதியிலுள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு கடந்த திங்கட்கிழமை (18) இரவு நான்கு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழு குறித்த குடும்பஸ்தரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த குடும்பஸ்தரை வெட்டுக் காயங்களுடன் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது -38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலாதிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        